உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்

கருமலையான் கோவில் பண்டிகை கோலாகலம்

அந்தியூர், ந்தியூர், கருமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வெகு விமர்சையாக நடக்கும். அந்த வகையில் கடந்த, 14ல், பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கி, 22ல், கொடியேற்றம், நேற்று பொங்கல் பண்டிகை நடந்தது. முன்னதாக கருமலையான், பெருமாள், காமாட்சியம்மன் தனித்தனியாக பல்லக்கில், பக்தர்கள் தோளில் சுமந்தபடி மடப்பள்ளியில் இருந்து அருகில் உள்ள வனத்திற்கு சென்றனர். மீண்டும் இன்று காலை, வனத்தில் இருந்து மடப்பள்ளிக்கு சாமிகள் வந்தடையும்.அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை