மேலும் செய்திகள்
குறுமைய போட்டிகளில் குமுதா பள்ளி சாதனை
03-Sep-2024
சரக விளையாட்டு போட்டிகள்
30-Aug-2024
ஈரோடு: -நம்பியூர் குறுமைய அளவிலான பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டிகள், புளியம்பட்டியில் நடந்தது. இதில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவியர், கையுந்து பந்து போட்டிகளில், 14, 16, 17 வயது பிரிவில் ஆண், பெண் என இரு பிரிவிலும் முதலிடம் பெற்றனர், மேலும் இறகுப்பந்து, சதுரங்கம், கேரம், மேசை பந்தாட்டம் விளையாட்டுகளில் வெற்றி பெற்று, 82 தங்கம், 6 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், தடையோட்டத்தில், 28 தங்கம், 29 வெள்ளி, 15 வெண்கல பதக்கம் அள்ளினர். குழு மற்றும் தனிநபர் விளையாட்டுகளில் மொத்தம், 110 தங்கம், 35 வெள்ளி, 15 வெண்கலம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
03-Sep-2024
30-Aug-2024