உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விரைவில் பயன்பாட்டுக்கு மொடச்சூர் வணிக வளாகம்

விரைவில் பயன்பாட்டுக்கு மொடச்சூர் வணிக வளாகம்

கோபி: கோபி அருகே மொடச்சூரில், வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இதில் பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனை நடக்கிறது. தவிர, காய்கறி முதல், மளிகை சாமான்கள் வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை விரிக்கின்றனர். சந்தை நுழைவாயில் பகுதியில் இருந்து, அண்ணா நகர் வழிச்சாலையில் சிறு வியாபாரிகள் கடை விரிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சூழலில் மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில், 1.64 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட, கூடாரத்துடன் கூடிய வணிக வளாகம், மூன்று மாதங்களுக்கு முன் திறப்பு விழா கண்டது. ஆனால் வியாபாரிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்காததால், வாரச்சந்தை வளாகத்தில் இடநெருக்கடியால், சிறு வியாபாரிகள் முதல், மக்கள் வரை அவதியுறுகின்றனர். வணிக வளாகத்தை விரைவில் வியாபார பயன்பாட்டுக்கு அனுமதிக்க, மொடச்சூர் சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில், 'வரும் வாரத்தில் வணிக வளாகம் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி