உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது

அரியலுார் வாலிபருடன் கோழி திருடிய முத்துார் பெண் கைது

காங்கேயம்: காங்கேயம் அருகே கீரனுார், கவலைக்காட்டுவலசை சேர்ந்த விவ-சாயி சாமிநாதன், 54; தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை தோட்டத்தில் இருந்த நாய் இடை-விடாமல் குரைத்தது. இதனால் சந்தேகமடைந்து சாமிநாதனும், அவரது மனைவியும் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு இரண்டு பேர் கையில் சாக்குபையுடன் ஓடி வந்தனர். இதைப்பார்த்து அவர் சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு, இருவரையும் வளைத்து பிடித்தனர். சாக்கைத் திறந்து பார்த்தபோது இரண்டு சேவல், மூன்று கோழி இருந்தது.காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அரி-யலுார் மாவட்டத்தை சேர்ந்த தீபக், 28; முத்துாரை சேர்ந்த பழ-னியம்மாள், 40, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை