உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண் கடத்திய இயந்திரத்தை பிடித்து கொடுத்தும் தப்ப விட்ட அதிகாரிகள்; விவசாயிகள் புகார்

மண் கடத்திய இயந்திரத்தை பிடித்து கொடுத்தும் தப்ப விட்ட அதிகாரிகள்; விவசாயிகள் புகார்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த மாதம்பாளையம் பஞ்., மாராயி-பாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பராம-ரிக்கப்பட்டு வருகிறது. மீதி நிலங்களில் கிராவல், செம்மண்ணை உரிய அனுமதியின்றி வெட்டி எடுத்தனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், மக்கள், கடந்த, 20ல் அங்கு சென்றனர். மண் வெட்டி எடுத்துக் கொண்டிருந்த ஹிட்டாச்சி இயந்திரத்தை சிறை-பிடித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குட்டை மற்றும் மேய்ச்சல் நிலங்களில் கிரா வல், செம்மண்ணை கடத்தி, செங்கல் சூளைக்கு ஒரு லோடு, 8,000 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். அனுமதி சீட்டை கேட்டால், மொபைலில் காட்டுகின்றனர். அதில் அடித்தல், திருத்தத்துடன், ஊராட்சி தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர். மண் கடத்தலில் ஈடுபட்ட ஹிட்-டாச்சி இயந்திரத்தை, ஆர்.ஐ.,ரகுநாதன், மாதம்பாளையம் வி.ஏ.ஓ., சபரியிடம் ஒப்டைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. போலீசாரிடம் கேட்டால் வருவாய்த்துறை புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்கின்-றனர். மண் கடத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தையும் அதிகாரிகள் தப்ப விட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ