உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ பிரிவில் முதியவர் கைது

போக்சோ பிரிவில் முதியவர் கைது

ஈரோடு, ஈரோட்டில் இரு சிறுமிகளிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி, 66, பெட்டி கடை வைத்துள்ளார். இவர், 9, 10 வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமிகளின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அக்பர் அலியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ