உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு பணி 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைப்பு

ஈரோட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு பணி 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிக்காக, 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால், தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளனர்.கேரளா மாநில எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவ குழுவினர், 24 மணி நேரமும் கண்காணிப்புடன், கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்து, தமிழகத்தில் அனுமதிக்கின்றனர். தெற்று பரவக்கூடியது என்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர் பறவைகள், வனப்பறவைகளை தாக்கும். பறவை காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும் 'எச் 5 என் 1' என்ற வகை வைரஸ் கிருமி, அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழித்தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. நோய் வராமல் தடுக்க, நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில், 65 முட்டை கோழி பண்ணைகளில், 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில், 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.இம்மாவட்டத்தில் அனைத்து கோழி பண்ணைகள், புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து, மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம்.வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம். நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து, தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி உள்ளோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ