உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேரி பேக் பயன்பாடு கடைகளுக்கு அபராதம்

கேரி பேக் பயன்பாடு கடைகளுக்கு அபராதம்

தாராபுரம்;திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் உள்ள பேக்கரி மற்றும் ஓட்டல்களில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்திய ஏழு கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் இருந்த நான்கு கடைகளுக்கு, தலா, 4,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். காலாவதியான, 13 கிலோ உணவுப்பொருள் மற்றும் 9 லிட்டர் குளிர் பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர். உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான அறிவுரைகளை கூறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ