உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசாணைப்படி ஊதியம் கேட்டுஉள்ளாட்சி பணியாளர்கள் மனு

அரசாணைப்படி ஊதியம் கேட்டுஉள்ளாட்சி பணியாளர்கள் மனு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் துாய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி, அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க கோரி, கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 டவுன் பஞ்சாயத்துக்கள், 225 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி, கோபி நகராட்சியில் மட்டும், 400 பேர் பொது சுகாதார பிரிவில் பணி நிரந்தரம் பெற்று துாய்மை பணியாளர்களாக உள்ளனர். மற்றவர்கள் டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணி செய்கின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, அகவிலைப்படியுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும். அரசு அகவிலைப்படியை ஆண்டு தோறும் நிர்ணயம் செய்து வெளியிடுகிறது. இவ்வாறு, 2024-25ம் ஆண்டுக்கு, 6,593 ரூபாய் அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை சேர்த்து, 2024 ஏப்., முதல் ஊதியம் வழங்க வேண்டும். நகராட்சிகளிலும், டவுன் பஞ்.,களிலும் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும், சுய உதவிக்குழு மூலமும் பணியாற்றும், பணி நிரந்தரம் செய்யப்படாத துாய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், டி.பி.சி., பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்போர் உள்ளிட்ட அனைத்து வகை பணியாளர்களுக்கும் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை