உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் நகராட்சியில் நாய் தொல்லை கட்டுப்படுத்த கோரி கமிஷனரிடம் மனு

காங்கேயம் நகராட்சியில் நாய் தொல்லை கட்டுப்படுத்த கோரி கமிஷனரிடம் மனு

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த, கோரிக்கை மனு அளித்தனர்.அமுத சுரபி அறக்கட்டளை, 3 ஸ்டார் நண்பர் அறக்கட்டளை மற்றும் காங்கேயம் தன்னார்வலர்கள், நகராட்சி கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: காங்கேயத்தை சுற்றியுள்ள காலனிகளில் தெருநாய்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. மக்களை மட்டுமின்றி ஆடு, மாடுகளை கடித்து குதறுகின்றன. இதனால் நகராட்சி மக்கள் பீதியில் நட-மாடும் நிலை தொடர்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மூர்த்திரெட்டிபாளையம் காலனியில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள், ஜெகநாதனின் ஆட்டுப்பட்டியில் புகுந்து கடித்ததில், ௧௦ ஆடுகள் பலியாகி விட்டன. பல ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன. அதே பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. எனவே அப்பகுதியில் நாய்கள் நடமாட்-டத்தை கட்டுப்படுத்தா விட்டால், மையத்தில் படிக்கும் குழந்தை-களும் கடிபடும் அபாயம் உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ