உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.இ.டி., கலை கல்லுாரியில் வேலை வாய்ப்பு நாள் விழா

வி.இ.டி., கலை கல்லுாரியில் வேலை வாய்ப்பு நாள் விழா

ஈரோடு: திண்டல் வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நாள் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மூவேட் (முன்னாள் சி.எஸ்.எஸ். கார்ப்) இணை இயக்குனர் பத்மா ஜெயராமன் கலந்து கொண்டார்.கல்லுாரி முதன்மை ஆலோசகர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.வேலை வாய்ப்பு அலுவலர் ஜெகநாத், பன்னாட்டு நிறுவனங்களில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர், நிறுவனங்கள் மற்றும் ஊதியம் குறித்து விவரித்தார்.டி.சி.எஸ்., பிளேனட் ஸ்பார்க், பெடரல் வங்கி, டிலாய்டு, பயோடா, வீ டெசிக்னோலஜிஸ் முதலான, 36 நிறுவனங்களில், 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.இதில் 7.10 லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு பிளேனட் ஸ்பார்க் நிறுவனத்தாலும், 6.1௦ லட்சம் ஆண்டு ஊதியத்துக்கு பெடரல் வங்கி நிறுவனத்தாலும், 3.8௦ லட்சம் ஆண்டு ஊதியத்திற்கு டிலாயிட் நிறுவனத்தாலும், மாணவர் தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ