உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேனர்கள் அகற்றம்

விழிப்புணர்வு பேனர்கள் அகற்றம்

ஈரோடு:நாடாளுமன்ற தேர்தலில், ௧௦௦ சதவீத ஓட்டுப்பதிவுக்காக, ஈரோட்டில் பல்வேறு இடங்களில், தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிளக்ஸ், சிறு கட்-அவுட், தட்டிகள் வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்தும் இவற்றை அகற்றாததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக மத்திய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் தனியார் விளம்பர பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி