உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழில் நுட்பத்தால் பள்ளிகள் வெறிச்

தொழில் நுட்பத்தால் பள்ளிகள் வெறிச்

ஈரோடு : கடந்த காலங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவு நாளிதழ்களில் வெளியாகும். பள்ளிக்கு சென்றே மதிப்பெண் விபரத்தை பார்க்க முடியும். இதனால் நாளிதழ் வாங்கவும், பள்ளிகளில் ஒட்டப்பட்ட மதிப்பெண் விபரம் அறியவும் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுப்பர். தற்போது தொழில் நுட்பத்தால் பொதுத்தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரத்துடன் மாணவர்களின் மொபைல் போன்களுக்கே, தேர்வு முடிவு வெளியான அடுத்த வினாடி வந்து விடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தால் களை கட்டும் பள்ளிக்கூடங்கள் வெ றிச்சோடுவது தற்போதைய வழக்கமாகி விட்டது.நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள், மாணவர்களே தென்பட்டனர்.அதேசமயம் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு ஏற்கனவே விண்ணப்பம் வினியோகம் செய்திருந்தனர். இதனால் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவை தேர்வு செய்ய மாணவ, மாணவியர் சென்றதால், கூட்டத்தை காண முடிந்தது. மொத்தத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை, நயா பைசா செலவில்லாமல் கிடைக்கும் நிலைக்கு, தொழில் நுட்ப வரவு கொண்டு சென்று விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை