உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் இன்று சக்தி அழைப்பு நாளை முதல் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்

மாரியம்மன் கோவிலில் இன்று சக்தி அழைப்பு நாளை முதல் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம்

சேலம்:சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம், 7ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. 23ல் பூச்சாட்டுதல், 24ல் கொடியேற்று நிகழ்ச்சி, 30ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 3ல் ஊஞ்சல் உற்சவம் நடந்-தது. இன்று இரவு, 7:00 மணிக்கு சக்தி அழைப்பு நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு சக்தி கரகம் நடக்க உள்ளது. 7ல் பொங்கல் வைபவம், 8ல் பொங்கல், உருளுதண்டம் நிகழ்ச்சி, 9 இரவு, அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது. 10ல் கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11 இரவு, 11:30 மணிக்கு சப்-தாபரணம், 12 மதியம், 1:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. தினமும் அம்ம-னுக்கு பல்வேறு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடக்கின்றன. பெறுகிறது. பக்தர்கள் பெங்கல் வைக்க, கோவில் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இக்கோவில் திருவிழாவையொட்டி, நாளை முதல், 9 வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அறிக்கை:அம்மாபேட்டையில் இருந்து வரும் பஸ்கள், பட்டைக்கோ-விலில் வலதுபுறம் திரும்பி, முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவ-லகம், அப்சரா இறக்கம், குண்டுபோடும் தெரு வழியே பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். திருவள்ளுவர் சிலை வழியே பழைய பஸ் ஸ்டாண்டின் முதல் தளம் செல்லும் பஸ்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட பாதை வழியே செல்லலாம். திருச்சி சாலை வழியே வந்துசெல்லும் பஸ்கள் வழக்கம்போல் செல்லலாம். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள், அப்சரா இறக்கம், கலெக்டர் அலுவலகம், சுகவனேஸ்வரர் கோவில், சுந்தர் லாட்ஜ் வழியே செல்லலாம்.பொது போக்குவரத்துபட்டைக்கோவிலில் இருந்து நகருக்குள் வரும், 4 சக்கர வாகனங்-களும், பஸ்கள் மாற்றம் செய்யப்பட்ட பாதையில் பயணம் செய்-யலாம். இருசக்கர வாகனங்கள், கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் இடதுபுறம் திரும்பி, ஏ.ஏ., சாலை வழியே செல்-லலாம். திருவள்ளுவர் சிலை வழியே கோட்டை மாரியம்மன் கோவிலை நோக்கி எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. மாறாக திருவள்ளுவர் சிலையில் இருந்து இடது புறம் திரும்பி சுகவனேஸ்வரர் கோவில் வழியே செல்லலாம். காந்தி சிலையில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி, கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். பிற வாகனங்கள், புலிக்-குத்தி சந்திப்பு வழியே செல்ல வேண்டும்.பக்தர்கள் வாகனம்கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் இருந்து, ஏ.ஏ., சாலை வழியே, விழாவுக்கு வரும் வாகன ஓட்டிகள், காந்தி சிலை வழியே வரும் வாகன ஓட்டிகள், ஈ.வெ.ரா., பேரங்காடி வளாகம், போஸ் மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி சாலையில் இருந்து திருவிழாவுக்கு வரும் வாகன ஓட்டிகள், குண்டு போடும் தெரு வழியே சென்று விக்டோரியா வணிக வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் கீழ்த-ளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்-தலாம். கலெக்டர் அலுவலகம் வழியே வரும் வாகன ஓட்டிகள், கொரோனா ரவுண்டானா, அப்ஸரா இறக்கம், குண்டுபோடும் தெரு வழியே சென்று விக்டோரியா வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட் கீழ்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்-களை நிறுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ