மேலும் செய்திகள்
ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டம்
26-Aug-2024
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்புஈரோடு, செப். 17-ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் மனிஷ் தலைமையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன். சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என உறுதிமொழி ஏற்றனர். இணை ஆணையாளர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.* ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், இருபால் ஆசிரியர், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
26-Aug-2024