உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்

உடல் நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., மரணம்

சத்தியமங்கலம்;அந்தியூர், சங்கராபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி, 59; சத்தி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். உடல்நிலை சரியில்லாமல் மூன்று மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பங்களாபுதுார் காவலர் குடியிருப்பில் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மதியம் அரசு மரியாதையுடன் நடந்தது. கடந்த, ௧993ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த குருசாமி, கடம்பூர், பங்களா புதுார் ஸ்டேஷனில் பணியாற்றி வந்துள்ளார். எஸ்.எஸ்.ஐ.,யாக சத்தியமங்கலத்தில் பணியாற்றினார். கவிதா என்ற மனைவி, கோகுல் ஆனந்த் என்ற மகன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ