உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுவன் ஓட்டிய மொபட் மோதி டெய்லர் பலி

சிறுவன் ஓட்டிய மொபட் மோதி டெய்லர் பலி

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 38, டெய்லர். நாராயணவலசில் உணவு வாங்கி கொண்டு நசியனுார் சாலையில் ஒரு பார்மசி அருகே சாலையை கடக்க சாலையோரம் நின்றிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஹீரோ ப்ளசர் மொபட் மோதியதில் மஞ்சுநாதன் கீழே விழுந்தார். தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மஞ்சுநாதன் மனைவி பூங்கொடி புகாரின்படி, மொபட்டை ஓட்டி வந்த, 17 வயது சிறுவன் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை