உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெலிகிராமில் ஆசை காட்டி மோசடி: -------கோவை நபர் கைது

டெலிகிராமில் ஆசை காட்டி மோசடி: -------கோவை நபர் கைது

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ண பிரசாத், சத்தியமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர், ஈரோடு பைசர் கிரைம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை உள்ளதாக, எஸ்.ஆர்.கே. அசோசியேட்ஸ், எஸ்.ஆர்.கே. குளோபல் டெக் என்ற பெயரில் அறிவிப்பு வெளியானது. அதில் குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பினோம். வர்த்தகமும் சரிவர நடந்து, வருவாயும் கிடைத்தது. அதிகளவில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில், 13 லட்சம் ரூபாய் அனுப்பிய நிலையில் வர்த்தகத்துக்கான நடவ-டிக்கை இல்லை. நாங்கள் முதலீடு செய்த தொகை திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவை, சவு-ரிபாளையம் சாலை, செந்தில் நகரை சேர்ந்த கதிரவன், 52, என்ப-வரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி