உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளிகள் திறக்க உள்ளதால் ஜவுளி விற்பனை அதிகரிப்பு

பள்ளிகள் திறக்க உள்ளதால் ஜவுளி விற்பனை அதிகரிப்பு

ஈரோடு:ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று ஜவுளிக்கான வாரச்சந்தை விற்பனை நடந்தது. சில்லறை ஜவுளி விற்பனை அதிகரித்தது.இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த பல வாரங்களாக ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் கடந்த, 2 வாரங்களாக வெயில் குறைந்து மழை பெய்ததாலும், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க உள்ளதாலும், விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள் திறப்பால் மாணவர்களின் சீருடை துணிகள், தைத்து வைக்கப்பட்ட யூனிபார்ம், பனியன், ஜட்டி, துண்டு, மாணவியருக்கான ஆடை அதிகம் விற்றது. தவிர, மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கான துணிகளை வாங்கி செல்கின்றனர். சில்லறை விற்பனை, 40 சதவீதம் வரை நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி