உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாப்பில் தரைத்தளம் குறுகலாக இருப்பதால் அவதி

பஸ் ஸ்டாப்பில் தரைத்தளம் குறுகலாக இருப்பதால் அவதி

அந்தியூர்: அத்தாணியில் இருந்து தவிட்டுப்பாளையம் வழியாக அந்தியூர் செல்வதற்கு, பொறிக்கடை முக்கு பஸ் ஸ்டாப்பை கடந்தே செல்ல வேண்டும். இங்கு வரும் டவுன் பஸ்கள், சிறிது துாரம் தள்ளி சென்று நிற்கின்றன. அங்கே ஒருபுறம் சென்டர் மீடியன், பஸ் நிற்பது என மீதி நடந்து செல்லும் அளவுக்கு இடம் உள்-ளது. அதிலும் பாதி சாக்கடை உள்ளது. இதனால் ஸ்டாப்பில் பய-ணிகள் இறங்கினால், சாக்கடையில் தவறி விழும் சூழலும் ஏற்ப-டுகிறது. இந்த அசம்பாவிதங்களை தவிர்க்க, நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அந்தியூர் டவுன் பஞ்., நிர்வாகம் இணைந்து, பஸ் ஸ்டாப் பகுதியில் தரைத்தளத்தை அகலப்படுத்தி, சாக்க-டையை மேல் தளத்தை கான்கிரீட் கொண்டு மூட வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி