உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயில் எதிரொலி நுங்கு விற்பனை அமோகம்

காங்கேயம் : காங்கேயத்தில் கோடை வெயிலை சமாளிக்க பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது. முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த நுங்கை சாப்பிடுவதால் நோய்கள் குணமடையும். உடல் சூடு தணியும். இதனால் மக்கள் அதிகமாக வாங்கிச்செல்கின்றனர். விலை அதிகம் என்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் வாங்குவதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால், வரத்து குறைந்து, விலை அதிகரித்து விட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்