உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி பகுதியில் கசிவு நீர் ஓடை துார்வாரும் பணி துவக்கம்

மாநகராட்சி பகுதியில் கசிவு நீர் ஓடை துார்வாரும் பணி துவக்கம்

ஈரோடு, ஆஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஓடைகள் துார்வாரும் பணியை, அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.ஈரோடு மாநகராட்சி, 3, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட காசிபாளையம், சேனாதிபதிபாளையம், சத்யா நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் ஓடையில் செடி, கொடி வளர்ந்து முட்புதராகியுள்ளது. மக்கள் வீசும் குப்பை கழிவுகளால் துார்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முடியாமல், சாலைகள், வீடுகளை சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மாநகராட்சி சார்பில், கசிவு நீரோடையை தனியார் மூலம் துார் வாரும் பணி நேற்று தொடங்கியது. கமிஷனர் மணீஷ் தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி துார்வாரும் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.கீழ்பவானி கசிவு நீர் ஓடையில், காசிபாளையத்தில், 2 கி.மீ.; சேனாதிபதிபாளையத்தில், 1.8 கி.மீ.,; சாஸ்திரி நகரில், 2 கி.மீ.,; சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 7.8 கி.மீ., துாரத்துக்கும் துார்வாரப்படவுள்ளதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறுகையில், கொங்கு பகுதியை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வருத்தத்தில் கூறி இருக்கிறார். கொங்கு மண்டலம் முதல்வர் ஸ்டாலின் வசம் சென்று விட்டதே என்ற ஆதங்கத்தில் பேசியுள்ளார். இதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. அதே வேளையில் அவர்கள் கூறும் நல்ல விஷயங்களை முதல்வரும் ஏற்று கொள்ள தயாராக உள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி