உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்சிலிருந்து இறங்கியபோது டயரில் சிக்கி தொழிலாளி சாவு

பஸ்சிலிருந்து இறங்கியபோது டயரில் சிக்கி தொழிலாளி சாவு

பவானி:வெள்ளித்திருப்பூர் அருகே சென்றாயனுார் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 55, கூலி தொழிலாளி. இவரும், மனைவி மலர்க்கொடியும், 50, நேற்று முன்தினம் மாதேஸ்வரன் மலைக்கு பஸ்ஸில் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டு வந்தனர். வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி ரோட்டில் உள்ள அரசமரம் பஸ் ஸ்டாப்பில், ஓடும் பஸ்சிலிருந்து சின்னசாமி இறங்கினார். அப்போது, தடுமாறி கீழே விழுந்து பின்பக்க டயரில் சிக்கினார். அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்