உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருமண தடை நீக்கும் யாகம் வரும் ௮ம் தேதி நடக்கிறது

திருமண தடை நீக்கும் யாகம் வரும் ௮ம் தேதி நடக்கிறது

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும், 8ம் தேதி (சனிக்கிழமை), திருமண தடை நீக்கும், மாபெரும் சுயம்வரா பார்வதி யாகம் நடக்கவுள்ளது. ஆண், பெண்ணுக்கு திருமண தடை ஏற்பட ஜோதிட அமைப்பு, பித்ரு தோஷமுமே முக்கிய காரணம் என்பார்கள். இந்த இரு வகை தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது. திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி, கொடுமுடி, காளஹஸ்தி, வைத்தீஸ்வரன் கோவில், பவானி கூடுதுறை, நவக்கிரஹ கோவில்களில் செய்யப்படும் அனைத்து பூஜை வழிபாடு, கிரக தோஷ நிவர்த்தி இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த யாக பூஜையில் பங்கேற்று திருமணம் ஆனவர்கள், தம்பதியாக இந்த பூஜையில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர். யாக பூஜையில் பங்கேற்க, 97905--91091 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம். பங்கேற்க கட்டணம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி