உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சுற்று வட்டச்சாலைக்கு பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு

ஈரோடு சுற்று வட்டச்சாலைக்கு பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் புதுார்-எல்லீஸ்பேட்டை வரையிலான, புதிய சுற்று வட்டச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராம மக்கள், ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக துணை இயக்குனரிடம் மனு வழங்கினர்.ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் புதுார் முதல் எல்லீஸ்பேட்டை வரை, 100 அடி அகலத்தில் சுற்றுச்சாலை (ரிங் ரோடு) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 32 கி.மீ., துாரம் வரை அமையும் ரிங் ரோடு பணிக்கான திட்ட வரைவை அரசு தயாரித்து வருகிறது. இதற்கிடையில், சுற்று வட்டச்சாலைக்காக பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலம், குடியிருப்பு பட்டா நிலங்கள் போன்றவற்றையும் ஆர்ஜிதம் செய்யும் சூழல் உள்ளது. இதற்காக இச்சாலை அமையும் கிராம மக்களுக்கு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாவடிபாளையம் புதுார், ஓலப்பாளையம், காஞ்சிகோவில், திருவாச்சி, கூரப்பாளையம், மூலக்கரை, புத்துார் புதுப்பாளையம், புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், துய்யம்பூந்துறை, சின்னியம்பாளையம், கூரப்பாளையம் என பல்வேறு பகுதி மக்கள், நேற்று மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனு வழங்கினர்.இதுபற்றி, பிச்சாண்டம்பாளையம், சின்னியம்பாளையம் உட்பட பல்வேறு கிராம மக்கள் கூறியதாவது:சாவடிபாளையம் புதுார்-எல்லீஸ்பேட்டை வரையிலான சுற்று வட்டச்சாலைக்கான பாதையில் பல வீடுகள், கட்டடங்கள், வீட்டுமனை பட்டா, பொது இடங்கள், தடங்கள், ஏராளமான விளை நிலங்கள், பல்வேறு மரங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அகற்றும்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். சுற்று வட்டச்சாலை அமையும் இடங்களில் பல தலைமுறையாக வசிப்போரின் வீடுகள், விளை நிலங்கள், கிணறு, போர்வெல், தென்னை, பாக்கு மரங்கள், பிற பயிர்கள் உள்ளன. இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு தேவை இல்லை. இத்திட்டத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை