ஈரோடு: தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால், ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், 700 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. தாளவாடி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஊட்டி, கொடைக்கானல், பெங்களுரு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்தாகிறது. இன்று, நாளை மற்றும் 12, 16, 17 என முகூர்த்த நாட்கள் வரிசை கட்டி வருவதால், காய்கறி விலை கிலோவுக்கு, 10 முதல், 30 ரூபாய் வரை எகிறியுள்ளது.நுால்கோல் ஒரு கிலோ, 100 ரூபாய், கேரட், பீன்ஸ், 60, கடந்த வாரம், 30க்கு விற்ற அவரைக்காய் நேற்று, 180க்கும், பச்சை பட்டாணி, 350, முருங்கை, 100, கருணை கிழங்கு, 120, பச்சை மிளகாய், 150, இஞ்சி, 180 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக, 15,000 கட்டு கொத்தமல்லி தழை வரும். தற்போது விளைச்சல் குறைவால், 5,000 கட்டு மட்டுமே வந்ததால், ஒரு கட்டு, 80 முதல், 100 ரூபாய் வரை உச்சத்துக்கு போனது. தக்காளி விலை கடந்த வாரம், 50க்கு விற்றது. நேற்று, 60 ரூபாய், சின்ன வெங்காயம், 70ல் இருந்து, 80 ரூபாய்க்கும் விற்பனையானது.சுரைக்காய்-20, பாகற்காய்-60, புடலை-50, பீர்க்கன்-80, முள்ளங்கி-50, வெள்ளை பூசணி-40, மஞ்சள் பூசணி-40, ஊட்டி உருளை-80, சாதா உருளை-40, பெரிய வெங்காயம்-40, மேரக்காய்-60, முட்டைகோஸ்-40, மாங்காய்-60, கத்தரிக்காய்-30, வெண்டை-30, கொத்தவரைக்காய்-60, குடை மிளகாய்-80, கோவைக்காய்-40 ரூபாய்க்கும் விற்பனையானது. சுபமுகூர்த்த நாட்கள் முடியும் வரை, இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.