| ADDED : ஜூன் 19, 2024 02:14 AM
ஈரோடு:ஈரோடு, கே.கே.நகர், மாரப்பன் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; இவர் மனைவி கோவை, பிரஸ் காலனி, பாலாஜி கார்டனில் வசிக்கும் சுகந்தி தர்ஷிதா.சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு மீது, ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 உத்தரவுப்படி, ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனுவில் சுகந்தி தர்ஷிதா கூறியிருப்பதாவது:கடந்த, 2021ல் கே.கே.நகரில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு என் கணவன் தங்கி இருந்தார். அவருக்கு சமையல் செய்வதற்காக ஆனந்தி என்ற பெண் இருந்தார்.இந்நிலையில் 2021 ஜன., 22ல் நெஞ்சுவலி ஏற்பட்டு கணவர் இறந்து விட்டதாக கூறி, வீட்டு உரிமையாளர் குணசேகரன், ஆனந்தி, திருநாவுக்கரசு மற்றும் மூர்த்தி ஆகியோர் எனக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது சொந்த ஊரான விழுப்புரம் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ஐந்து நாட்கள் கழித்து எனக்கு தகவல் தெரிவித்தனர். என் கணவரிடம் இருந்த, 1.௯௦ லட்சம் ரூபாய், சொத்து ஆவணங்கள், ஐந்தரை பவுன் தங்க செயின், 2 பவுன் தங்க மோதிரம், ஹோண்டா ஆக்டிவா மொபட்டை அபகரித்து கொண்டனர். நால்வரும் திட்டமிட்டு கணவரை கொலை செய்தனர்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.தாலுகா போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்கின்றனர்.