உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

புதர் மண்டிய சோழா நகர் பூங்கா மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

ஈரோடு: ஈரோட்டில் கனிராவுத்தர் குளம் அருகே சோழா நகரில், பூங்கா புதர் மண்டியுள்ளதால், மக்கள் பொழுது போக்க முடியாமல் தவிக்கின்றனர்.ஈரோடு மாநகர மக்களின் பொழுது போக்கு மற்றும் ஓய்வுக்காக, மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வகையில் எட்டாவது வார்டுக்கு உட்பட்ட, கனிராவுத்தர் குளம் அருகேயுள்ள சோழா நகரில், பொழுது போக்கு பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள், பூச்செடி, நடைபாதை, அமர்ந்து ஓய்வெடுக்கும் இருக்கை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சுற்றுப்பகுதி முதியோர், குழந்தைகள் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுது போக்கி வந்தனர். ஆனால், பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதை முழுதும் பிளாஸ்டிக், குப்பை குவியலாக உள்ளது. புதர்களின் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. குழந்தைகள், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ