உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் உண்டியலை உடைத்த வாலிபர் கைது

கோவில் உண்டியலை உடைத்த வாலிபர் கைது

பவானி: அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் தனராஜ், 62; விசைத்தறி நெசவுத் தொழிலாளி. குருவ-ரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நாகர் கோவிலை சுத்தம் செய்து பராமரித்து வருகிறார். நேற்று அதி-காலை கோவில் வளாகத்தில் சத்தம் கேட்கவே எழுந்து சென்று பார்த்தார். அப்போது ஒரு ஆசாமி, உண்டியலை உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு தப்ப முயன்றவரை அப்பகுதி மக்கள் பிடித்தனர். சின்ன பருவாச்சி, சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வம், 26, என்பது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். செல்வனை கைது செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்