உர பாக்கெட் தின்ற 12 ஆடுகள் பலி
சத்தி, தாளவாடி அருகே பையனாபுரம் எத்துக்கட்டியை சேர்ந்தவர் பசவண்ணா. இவர் மூன்று வெள்ளாடு, ஒன்பது செம்மறி ஆடு வளர்த்து வந்தார்.நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவிழ்த்து விட்டிருந்தார். இந்நிலையில், ௧௨ ஆடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்து சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் இறந்து கிடந்த நிலத்தில், காலி யூரியா உர பாக்கெட்டுகள் கிடந்தன. இதை கடித்து தின்றதால் பலியானது தெரிய வந்தது. இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பசு மாடும் இதேபோல் மர்மமாக இறந்தது. யூரியா உர பாக்கெட்டுகளை கால்நடைகள் மேயும் நிலத்தில் வீசியுள்ளனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.