உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாய கிணற்றில் விழுந்த 14 காட்டுப்பன்றிகள் மீட்பு

விவசாய கிணற்றில் விழுந்த 14 காட்டுப்பன்றிகள் மீட்பு

அந்தியூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் முத்து ராமன், 49; விவசாயியான இவரது தோட்டத்தில், 70 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் ஐந்தடிக்கு தண்ணீர் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் கிணற்றுக்குள் சத்தம் கேட்கவே, முத்துராமன் எட்டிப் பார்த்தார். காட்டுப்பன்றிகள் தத்தளித்து கொண்டிருந்தன. இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற வீரர்கள் பன்றிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிருடன், 14 பன்றிகளையும், இறந்த நான்கு பன்றிகளையும் மீட்டனர். உயிருடன் இருந்த காட்டு பன்றிகளை கூண்டுக்குள் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அனைத்தும் அந்தியூரில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. இரை தேடி வந்தபோது தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ