| ADDED : மார் 13, 2024 01:58 AM
கோபி:கோபி அருகே சரக்கு ஆட்டோ, பைக் மீது கல்லுாரி பஸ் மோதியது. இதில் பைக்கில் வந்த இரு கட்டட தொழிலாளிகள் பலியாகினர்.கோபி
அருகே பழைய கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக், 17,
லோகநாதன், 23, ஸ்ரீதர், 18; மூவரும் கட்டட தொழிலாளர்கள்;
வழக்கம்போல் வேலைக்கு அப்பாச்சி பைக்கில், நேற்று காலை, 9:00 மணிக்கு
புறப்பட்டனர். ஸ்ரீதர் பைக்கை ஓட்ட, இருவரும் அமர்ந்திருந்தனர்.
போடிசின்னாம்பாளையம் என்ற இடத்தில் முன்னால் சென்ற, பொலிரோ பிக் அப்
சரக்கு ஆட்டோவை முந்தியது. அதேசமயம் எதிரே வந்த சத்தியமங்கலம்
தனியார் கல்லுாரி பஸ் ஆட்டோ மீது மோதி, பைக் மீதும் மோதி நின்றது.டூவீலரில்
பயணித்த மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், கோபி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியில்
கார்த்திக் இறந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லோகநாதன் இறந்தார்.ஸ்ரீதர்
கோபியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி
தனியார் கல்லுாரி பஸ் டிரைவரான அரவிந்த் சர்மா, 27, மீது, கடத்துார்
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.