உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் பள்ளி வாகனம் மீது மொபட் மோதி 2 பேர் பலி

தனியார் பள்ளி வாகனம் மீது மொபட் மோதி 2 பேர் பலி

பவானி, அத்தாணி அருகே பள்ளி வாகனம் மீது மொபட் மோதியதில் இருவர் பலியாகினர். அத்தாணி அருகே சவுண்டப்பூர், ஆண்டிக்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 43; பிரேக்கர் மெஷின் ஆப்பரேட்டர். திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். பெருந்துறையை சேர்ந்தவர் ரமேஷ், 38; திருமணம் ஆனவர். மணிகண்டனுக்கு உதவியாளராக இருந்தார். இருவரும் நேற்று காலை, 7:45 மணியளவில், எக்ஸல் மொபட்டில், அத்தாணி - - சத்தி சாலையில் சென்றனர். ஓடைமேடு பெரும்பள்ளம் பகுதியில், முன்னால் சென்ற லாரியை முந்தியபோது, எதிரே அத்தாணி தோப்பூரில் செயல்படும் தனியார் பள்ளி மினி வேன் மீது மொபட் மோதியது. இதில் இருவரும் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியாகினர். விபத்து தொடர்பாக பள்ளி வேன் டிரைவர் மீது, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலத்தால் விபத்துவிபத்தில் பள்ளி வேனில் இருந்த மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த இடத்தில் உள்ள பாலம் குறுகலாக உள்ளது. ஏழு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் ஆம்னி கார் பாலத்தின் தடுப்புசுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்ததில், கணவன் கண் முன் மனைவி பலியானார். எனவே பாலத்தை அகலப்படுத்தி, விபத்துக்களை தவிர்க்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை