உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 207 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 207 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.மகளிர் உரிமை தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம் என, 207 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பை பெற்ற மாற்றுத்திறனாளி சர்மிளாவுக்கு, தன் விருப்ப நிதியில் இருந்து, 32,000 ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை கலெக்டர் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராதிகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி