மேலும் செய்திகள்
மாநகராட்சி கூட்டத்தில் 74 தீர்மானம் நிறைவேற்றம்
31-Aug-2024
கோபி நகராட்சி கூட்டத்தில்27 தீர்மானம் நிறைவேற்றம்கோபி, செப். 28-கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம், சேர்மேன் நாகராஜ்(தி.மு.க.,) கமிஷனர் பிரேம் ஆனந்த் தலைமையில் நேற்று நடந்தது.இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:முதலாவது வார்டு பகுதிக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டி அனுப்பவும். மண்வெட்டி, கத்தி போன்ற கருவிகள் தருவதில்லை. தெருவிளக்கு பொருத்த வலியுறுத்தினால், சம்பந்தப்பட்ட பணியாளர் வருவதில்லை. நகராட்சியில் எத்தனை பேட்டரி குப்பை வாகனங்கள் உள்ளன. அதில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்தவும்.சேர்மன் நாகராஜ்: தள்ளி செல்வதில் சிரமம் இருப்பதால், பேட்டரி வாகனங்களை பயன்படுத்தவே வலியுறுத்துகிறோம். அரசின் அனுமதி கிடைத்ததும் புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோபி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. போக்குவரத்தை சீரான முறையில் செயல்படுத்த, நகராட்சி பகுதியில் புதிய மேம்பாலம் அல்லது புறவழிச்சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சேர்மேன் தெரிவித்தார்.
31-Aug-2024