உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களுடன் முதல்வர் திட்டம் 2வது கட்டம் 11ல் துவக்கம்

மக்களுடன் முதல்வர் திட்டம் 2வது கட்டம் 11ல் துவக்கம்

ஈரோடு:தமிழக அரசின் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், நகர்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த டிச., மற்றும் கடந்த ஜன., மாதங்களில் முகாம் நடந்தது. தற்போது அனைத்து ஊரக பகுதியில் இரண்டாவது கட்டமாக, நடத்தி திட்டமிட்டு, 15 அரசு துறை சார்ந்த, 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, முகாம் நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியனில் உள்ள, 214 பஞ்.,களில் வரும், 11 முதல் செப்., 14 வரை, 72 முகாம் நடத்தப்படும். வரும், 11ல் சென்னிமலை யூனியன் குமாரவலசு பஞ்சாயத்து, கோபி யூனியன் சவுண்டப்பூர் பஞ்சாயத்தில் முகாம் நடக்க உள்ளது. இப்பகுதிகளில் வசிப்போர், தங்கள் கோரிக்கை குறித்த மனுவுடன், உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை