போதையில் கத்தி, கட்டையால் தாக்குதல் மேல் சிகிச்சையில் 3 பேர் அட்மிட்
ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெரு, டாஸ்மாக் கடைக்கு, நேற்று இரவு, 8:30 மணிக்கு தாண்டவராயபுரம், காமராஜர் நகரை சேர்ந்த அசோக், 42, ஆத்துார், கோட்டை செல்லதுரை, 23, தம்பி அரவிந்த், 21, குமார், 25, ஆகியோர் சென்றனர். 9:00 மணிக்கு, 'போதை'யில் அசோக் மற்றும் குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பினரும் கத்தி, உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர்.இதில் கழுத்து அறுபட்ட நிலையில் செல்லதுரை, 23, படுகாயத்துடன் குமார், 25, அரவிந்த், 21, மண்டை உடைந்த நிலையில் அசோக், 42, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செல்லதுரை, குமார், அசோக் ஆகியோர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆத்துார் அரசு மருத்துவமனையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.