உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழைக்காய் லோடு லாரி பல்டி டிரைவர் உட்பட 3 பேர் காயம்

வாழைக்காய் லோடு லாரி பல்டி டிரைவர் உட்பட 3 பேர் காயம்

புன்செய்புளியம்பட்டி, கோவை மாவட்டம் சிறுமுகை மூலத்துறையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வாழைக்காய் லோடு ஏற்றிய மகேந்திரா லோடு கிங் சரக்கு வாகனம் நேற்று மாலை சென்றது. பெரிய கொடிவேரியைச் சேர்ந்த சூர்யா, 30, ஓட்டினார். வாகனத்தில் கடம்பூரை சேர்ந்த சாய் தினேஷ், சுப்பிரமணி, முருகேஷ் உடனிருந்தனர். சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி முன் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை நடுவில் கவிழ்ந்தது. டிரைவர் உட்பட மூவருக்கும், தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேரிகார்டால் விபத்து?பெரியகள்ளிப்பட்டி போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் இருப்பதில்லை. மேலும் பேரிகார்டுகள் சாலையில் நெருக்கமாக தாறுமாறாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பேரிகார்டில் உரசி அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி