உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் 30 பேர் தேர்வு

தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் 30 பேர் தேர்வு

குமாரபாளையம்: ஈரோடு, 15வது பட்டாலியனின் கமாண்டிங் ஆபீஸர் அஜய் குட்டினோ ஆணைப்படி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில், மாணவர்களின் உயரம், எடை, ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும், 50 மாணவர்களுக்கு, என்.சி.சி., பயிற்சியளிக்கப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண்டு வீரநடை, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை பிரித்து பூட்டுதல், துாரங்களை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, 10 நாள் சிறப்பு முகாம், எழுத்து தேர்வு போன்ற பல்வேறு முறைகளில் தேசிய மாணவர் படையில் பயிற்சி அளிக்கப்பட்டு, 'ஏ' கிரேடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, உதவி தலைமை ஆசிரியர் ரவி, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் கார்த்தி ஆகியோர், மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி