இன்று காவலர் எழுத்து தேர்வு 3,174 பேர் எழுதுகின்றனர்
ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி மற்றும் வாய்க்கால்மேடு நந்தா பொறியில் கல்லுாரியில் காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது. மாவட்டத்தில், 2,470 ஆண்கள், 704 பெண்கள் என, 3,174 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஹால் டிக்கெட், அடையாள அட்டை, பிளாக் பால் பாய்ண்ட் பேனா கொண்டு வர வேண்டும். கூடுதலாக தேர்வரின் போட்டோவுடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.