உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்ட அளவில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஈரோடு மாவட்ட அளவில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த, 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.இதன்படி ஈரோடு மாநகர பகுதியில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் - 398, மதம் சார்ந்த கம்பங்கள்- 12, ஜாதி சார்ந்தவை-2, பில்லருடன் கூடிய கம்பங்கள் -40, என, 459 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.மாவட்ட அளவில் அரசியல் கட்சிகள், ஜாதி, மத, பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த அனுமதி பெறாத கொடிக்கம்பங்கள், 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அனுமதி பெறாத கொடிக்கம்பங்கள் எங்கும் இல்லை.இருப்பினும் முறையாக கண்காணித்து அகற்ற, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கவும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், வருவாய் துறையினருக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை