உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

தாராபுரம்:நீலகிரியை சேர்ந்தவர் சசிதரன், 44; தனது உறவினர்களுடன் பழனி கோவிலுக்கு மாருதி செலிரோ காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். தாராபுரத்தை அடுத்த குப்பனங்கோவில் அருகே நேற்று மாலை 6:00 மணியளவில் கார் வந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சசிதரன் உறவினர்களான நீலகிரியை சேர்ந்த லோகேஸ்வரி, 62, சாந்தகுமாரி, 60, பாலகிருஷ்ணன், 50, ஜஸ்வந்த், 12, ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை ஓட்டிய சசிதரன் காயமின்றி தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை