உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விடுதி மாணவர்கள் 40 பேருக்கு வாந்தி

விடுதி மாணவர்கள் 40 பேருக்கு வாந்தி

பெருந்துறை : பெருந்துறை அருகே துடுப்பதியில், தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது. இங்கு விடுதியில் தங்கி நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு இட்லி, சப்பாத்தி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட, 40 மாணவர்களுக்கு நேற்று வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதை ஏற்பட்டது.தகவலறிந்த கல்லுாரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விடுதி திரும்பினர். விடுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை