உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்

ஈரோடு: கரும்பு வளர்ப்போர், சக்தி சர்க்கரை ஆலை பங்குதாரர் சங்க பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அருணாசலம், சண்முகதரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் குப்புசாமி வரவேற்றார். பொருளாளர் சிவசங்கர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.கரும்பின் உற்பத்தி செலவை கணக்கிட்டு, வரும் கரும்பு அரவை பருவத்தில் அக்., முதல் வெட்டப்படும் கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டு கொள்வது. கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி அக்., 1 முதல் வெட்டப்படும் கரும்புக்கு கரும்பு வெட்டிய, 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை வலியுறுத்துவது. பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தையும், அந்தியூர் பகுதிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை