மேலும் செய்திகள்
ஐகோர்ட் வக்கீல் கொலை; சடலத்தை வாங்க மறுப்பு
30-Jul-2025
தாராபுரம் தாராபுரத்தில் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஆறு பேரும், சிறையில் அடைக்கப்பட்டனர். தாராபுரம் கல்லுாரி சாலையை சேர்ந்த வக்கீல் முருகானந்தம், 41; தாராபுரத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் ஆறு பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த தண்டபாணி, 65. நாட்டுதுரை, 65, தட்சிணாமூர்த்தி, 29, ராம், 22, சுந்தரன், 26, நாகராஜன், 29, என ஆறு பேருக்கும், தாராபுரம் அரசு மருத்துவமனையில், போலீசார் நேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதை தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன், இரவில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் ஆக.,௧௨ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆறு பேரையும், கோவை மத்திய சிறையில் அடைக்க, போலீசார் கொண்டு சென்றனர்.
30-Jul-2025