உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் இருந்து புதிதாக 8 பஸ்கள் இயக்கம்

ஈரோட்டில் இருந்து புதிதாக 8 பஸ்கள் இயக்கம்

ஈரோடு: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு போக்குவரத்து கழகத்தின், ஈரோடு மண்டலத்தில் இருந்து புதிதாக, எட்டு பஸ்கள் இயக்க துவக்க விழா நடந்தது.ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு, ஒன்பது நகர்புற பஸ்கள், 36 புறநகர் பஸ்கள் என, 45 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழித்தடங்களில் இயக்-கப்படுகிறது. கடந்த ஜூலை, 17 ல் புதிதாக, 15 பஸ்களும், கடந்த செப்., 12ல் புதிதாக, 5 பஸ்களும் துவக்கி வைக்கப்பட்-டது. இந்நிலையில் நேற்று ஈரோடு - கோவைக்கு 'ஈரோ-100 நான் ஸ்டாப்' பஸ்கள், 5, கோவை - சேலம் '1டூ1' பஸ்கள், 3 என, எட்டு பஸ்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஒரு பஸ்ஸின் விலை, 44 லட்சம் ரூபாய் என, 3.52 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்களின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. தவிர ஈரோடு மாவட்டத்தில், 37 புறநகர் பஸ்கள், 2 நகர பஸ்கள் புனரமைக்கப்பட்டு, புதிய தோற்ற பொலிவுடன் வழித்தடங்களில் இயக்கி வைக்கப்பட்டது.ஈரோடு எம்.பி., பிரகாஷ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையர் மணீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் சசிகுமார், தண்ட-பாணி, கோவை மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து சூரம்பட்டி அணைக்-கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்துக்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த வாய்க்கால் மூலம், 2,550 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பின், பெரிய சடையம்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை-யையும், அமைச்சர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ