உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் 8 தாசில்தார் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 8 தாசில்தார் இடமாற்றம்

ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் எட்டு தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கற்பகம், ஈரோடு முத்திரைகள் பிரிவு தாசில்தாராகவும், கோபி முத்திரைகள் பிரிவு தாசில்தார் தியாகராஜ், ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.ஈரோடு நகர நிலவரி திட்ட தாசில்தார் ஜெகநாதன், ஈரோடு டாஸ்மாக் உதவி மேலாளராகவும் (சில்லறை வணிகம்), இங்கு உதவி மேலாளராக பணி செய்த ஜெயகுமார், ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தாசில்தாராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு பறக்கும் படை தாசில்தார் கதிர்வேல், ஈரோடு கோட்ட கலால் அலுவலராகவும், கோட்ட கலால் அலுவலராக பணி செய்த வீரலட்சுமி, ஈரோடு உதவி ஆணையர் (கலால்) அலுவலக மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அனைவரும் உடனடியாக புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை