உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 86 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

86 டன் ரேஷன் அரிசி ஈரோட்டில் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்-றனர். நடப்பாண்டில் இதுவரை அரிசி கடத்தியதாக, 361 வழக்-குகள் பதிந்து, 378 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 86 ஆயிரத்து, 606 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்-யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 105 டூவீலர்கள், 34 நான்கு சக்-கர வாகனங்களை பறிமுதல் செய்து, கடத்தல் வாகன உரிமையா-ளர்களிடம், 51 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். ஆறு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்-டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ