உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கன்று ஈனும் நிலையில் பசுமாட்டை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சிறைபிடிப்பு

கன்று ஈனும் நிலையில் பசுமாட்டை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சிறைபிடிப்பு

பள்ளிப்பாளையம்: ஈரோடு அருகே, கருங்கல்பாளையம் பகுதியில், நேற்று மாட்டுச்சந்தை கூடியது. இங்கு ஒருவர், 3 மாடுகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு பசுமாடு நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளது. சந்தையில் மாட்டை வாங்கியவர், சரக்கு வாகனத்தில் கன்று ஈனும் நிலையில் இருந்த பசு மாடு உள்ளிட்ட, 3 மாடுகளையும் ஏற்றிக்கொண்டு காவிரியாற்று பாலம் வழியாக, பள்ளிப்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனத்தில் நின்றிருந்த பசுமாடு, நிற்க முடியாமல் வாகனத்திலேயே விழுந்து விட்டது.இதைக்கண்ட, பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழக விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி சபரிநாதன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சரக்கு வாகனத்தை சிறைபிடித்து, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சரக்கு வாகனத்தில் இப்படியே அழைத்து சென்றால், பசுமாட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.எனவே, மீண்டும் சந்தைக்கே கொண்டுச்சென்று, கன்று ஈன்றபின் அழைத்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ