உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப் பகுதியில் மரம் வெட்டியவர் மீது வழக்கு

மலைப் பகுதியில் மரம் வெட்டியவர் மீது வழக்கு

பவானி: குறிச்சி மலையில் மரங்களை வெட்டி கடத்தி சென்றவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாபேட்டை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் சர்வே எண் 426/1ல், உள்ள சர்மிளா என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு, குறிச்சி மலையில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டியதும், வண்டிப்பாதை அமைக்கப்பட்டதும் தெரிந்தது. மேலும், 12 அடி ஆழம் நிலத்தை தோண்டி மண் எடுக்கப்பட்டது.கடந்த மே, 8ம் தேதி இது குறித்து, அம்மாபேட்டை போலீசில், குறிச்சி வி.ஏ.ஓ., ராஜா புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த, 3ல், பவானி நில அளவையர் மற்றும் வி.ஏ.ஓ,, ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பணி மேற்கொள்ள சென்றனர். அப்போது, பச்சாம்பாளையத்தை சேர்ந்த மோகன், 47, என்பவர் மலைப் பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி கொண்டிருந்தார். மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள் என கேட்டதற்கு, அரசு அலுவலர்களை தகாத வார்த்தையால் திட்டிய மோகன், கொலை மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து, வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் மோகன், சர்மிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை